சொத்து வரி உயர்வை கண்டித்து திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொத்து வரி உயர்த்தப்பட்டது. கடந்த முறை கட்டிய வரியினை விட பல மடங்கு உயர்த்தப்பட்ட வரி நோட்டீஸ் வந்திருந்தது. இதனைக் கண்டித்து பல்வேறு கட்சிகளும் மாநகராட்சியினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் தற்போது வரி உயர்த்தப்பட்டு வரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சி அமைப்பு செயல்படாத நிலையில் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலான சொத்து வரி உயர்வினை ரத்து செய்ய வேண்டும் என மாநகராட்சி எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சொத்து வரி உயர்வினை கைவிட வேண்டும் எனக்கோரி மாநகராட்சியில் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...