கோவை : சாமர்த்தியமாக செயல்பட்டு ரயில் விபத்தை தவிர்த்த ரயில்வே கேட் கீப்பருக்கு ரூ. 2,000 ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி தெற்கு ரயில்வே கவுரவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 10-ம் தேதி ரயில்வே கேட் கீப்பர் திவாகர் குமார் என்பவர் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ரயில் எண் 16616 கோவை - மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் லெவல் கிராஸிங்கை கடந்து செல்லும் போது, ஒருவிதமான சத்தத்தை கேட்டுள்ளார். பின்னர், எல்.சி. கேட் பகுதியில் சென்று பார்த்த திவாகர், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை அறிந்தார். உடனடியாக, தொலைபேசியின் வாயிலாக சோமனூர் ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி, ரயில்வே ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்யப்பட்டது. பின்னர், அவ்வழியாக செல்லும் ரயில்களின் வேகம் தற்காலிகமாக குறைக்கப்பட்டு, பின்னர் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், பல உயிர்களைக் காப்பாற்றிய கோவையைச் சேர்ந்த ரயில்வே கேட் கீப்பர் திவாகர் குமார் சிங்கிற்கு ரூ. 2,000 மற்றும் சான்றிதழ் வழங்கி தெற்கு ரயில்வே துறை பொதுமேலாளர் ஆர்.கே. குல்ரேஷ்தா பாராட்டினார்.