கோவை: ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வணிகர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், மாநில அரசு கொண்டு வந்துள்ள பிளாஸ்டிக் தடையை தளர்த்தி மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, கோவை டாடாபாத் பகுதியில் அவ்வமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் தி.மு.க.,வின் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மத்திய-மாநில அரசுகள் தங்களது கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரையிலும் தங்களது போராட்டங்கள் தொடரும் என உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த உண்ணாவிரதத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்ட பந்தலில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மறுசுழற்சி செய்யக்கூடிய மற்றும் செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.