நீலகிரி: உதகைக்கு நடப்பாண்டில் பருவமழை தேவையான அளவு பெய்து கை கொடுத்ததால், அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பின், தடையில்லா மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம், நீர் மின் உற்பத்தியில், மாநில அளவில் முன் மாதிரியாக திகழ்கிறது. இங்கு, குந்தா, பைக்காரா நீர் மின் திட்டங்கள் செயல்படுகின்றன. அப்பர் பவானி, குந்தா, கெத்தை, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, மாயார், பார்சன்ஸ்வேலி, மரவக்கண்டி, போர்த்திமந்து உள்ளிட்ட 13 அணைகள் மற்றும் 30-க்கு மேற்பட்ட தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, அதில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
மேலும், இங்குள்ள 12 நீர் மின் நிலையங்களில் இருந்து 833.65 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 32 பிரிவுகள் உள்ளன. தற்போது, நாள்தோறும் சராசரியாக, 400 முதல், 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
பருவ மழையின் போது இதன் உற்பத்தி அதிகரிக்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சராசரியாக, 50 செ.மீ., அளவுக்கு மட்டும் மழை பெய்ததால் கடந்த காலங்களில் அவ்வப்போது மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்தாண்டில் ஆண்டு சராசரி மழை 75 செ.மீ., பதிவானது. நடப்பாண்டில் இதுவரை கோடை மற்றும் தென்மேற்கு பருவமழை சராசரி அளவை எட்டியதால் 70 செ.மீ., மழை தற்போதே பதிவாகி உள்ளது.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளில், கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் 90 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளன.
மின் உற்பத்தியும் சராசரி அளவான 400 மெகாவாட்டை தாண்டி 500 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''பருவமழை கைகொடுத்ததால் பெரும்பாலான அணைகளில், 90 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது. அடுத்த ஆண்டு வரை தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ளும் அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது. எனவே மின் உற்பத்தியில் பாதிப்பு இருக்காது."என்றனர்.