கோவை: தொடர் மழையால் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் நிரம்பியுள்ள வனக்குட்டைகளால் வன விலங்குகளுக்கு தண்ணீர் பிரச்சனை தீர்ந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதியில் யானை, மான், கரடி, செந்நாய் மற்றும் அறிய உயிரினங்களான புலி, கழுதை புலி என பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன. கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியால் வன விலங்குகள் தண்ணீர் இன்றி கடும் அவதிக்குள்ளாகி வந்தன.

இந்நிலையில், நடப்பு ஆண்டு தென் மேற்கு பருவமழை கை கொடுத்த காரணத்தால் மேட்டுப்பாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக நல்ல மழைபெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் ஆங்காங்கே நீரோடைகள் ஏற்பட்டு, வனப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட கசிவு நீர் குட்டைகள், தடுப்பணைகள் முழுவதும் நிரம்பியுள்ளன.
இனி மீண்டும் வட கிழக்கு பருவமழையும் தொடங்க இருப்பதால், இந்த ஆண்டு வன விலங்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு பிரச்சினை இருக்காது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மழை நீரினை பருகும் வன உயிரினங்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க இந்த நீர் நிலைகளில் வன விலங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் உப்புக் கட்டிகள் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.