நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய போலீசாரை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்கிய போலீசாரை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் போலீசார் இன்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை போலீசார் துரத்தி பிடித்தனர். இதில், நிலைகுலைந்த அவர் தவறி கீழே விழுந்தார். கீழே விழுந்த நபரை காவலர் கடுமையாக தாக்கினார். மேலும், அவ்வழியாக வேறொரு மோட்டர் சைக்கிளில் வந்த நபரை நடுரோட்டில் வைத்து காவலர்கள் தாக்கும் போது அவரும் நிலைதடுமாறி விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அந்தக் காவலரை கண்டித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த கோத்தகிரி காவல்நிலைய எஸ்.ஐ.நசீர் சம்பந்தப்பட்ட நபர்களை வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் ராம்சந்த் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவு பெற்றுள்ள நிகழ்வுகளை வைத்து போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

மேலும், நீலகிரிக்கு சுற்றுலா வரும் வாகன ஓட்டிகளைக் காவல்துறையினர் இவ்வாறு விசாரணை என்ற பெயரில் பொது இடத்தில் வைத்து தாக்குவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.