கோவை : இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பின் சார்பில் சிறந்த நிறுவனம் மற்றும் தலைவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது.

கோவையைச் சேர்ந்த இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த எம்.என்.சி., நிறுவனமான சாப் (SAP) இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. இவை இணைந்து விருதுக்கு தகுதியான பெயர்களை பரிசீலனை செய்துள்ளன. இதில், ஒவ்வொரு பிரிவில் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு, 27-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் 'கம்பெனி ஆப் தி இயர்' விருது வழங்கப்படுகிறது. இதில், கவுரவிக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் தலைவர்களுக்கு இந்த நிகழ்ச்சி பிரத்யேக தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பு - பொறியியல் துறை, தயாரிப்பு - ஆட்டோமொபைல் மூலக்கூறுகள், டெக்ஸ்டைல்ஸ், கல்வி, சுகாதாரம், உணவு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.