நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூரில் புதிய டாஸ்மாக் கடையை திறக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களுடன் குடிமகன்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர் டவுன் பகுதியில் டாஸ்யை திறக்க அதிகாரிகள் கடந்த சில நாட்களில் 2 முறை முயற்சி மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால், அதிகாரிகளின் முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டே வந்தது. இந்த நிலையில், 3-வது முறையாக புதிய டாஸ்மாக் கடையை திறக்க வருவாய் அதிகாரிகள் இன்று முயற்சி மேற்கொண்டனர்.

அப்போது, பொதுமக்களுக்கு ஆதரவாக வந்த அ.ம.மு.க. நிர்வாகிகளுக்கும், குடிமகன்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. டாஸ்மாக் கடை அமைய இருந்த கட்டிடத்தில் மக்கள் அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.