கோவை: தடாகம் பகுதியை அடுத்த தாளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். விவசாயிகளால் சங்க தலைவரான இவரது தோப்பு வீட்டில் நேற்று (சனிக்கிழமை) இரவு காட்டு யானை ஒன்று புகுந்தது.
கோவை : தடாகம் பகுதியை அடுத்த தாளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். விவசாயிகளால் சங்க தலைவரான இவரது தோப்பு வீட்டில் நேற்று (சனிக்கிழமை) இரவு காட்டு யானை ஒன்று புகுந்தது.
மேலும், அந்த வீட்டை சேதப்படுத்தியது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அப்பகுதி மக்கள், "விநாயகா தயவு செய்து போ!" என்று கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அவர்களின் கூச்சலை கண்டுகொள்ளாத யானை அங்கிருந்த அருசியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து செல்கிறது.
இது போன்ற சூழலில் இங்கு வாழ்வதே பயமாக இருக்கின்றதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். "கோவையின் பிறபகுதி மக்கள் இரவு நேரங்களில் தெருநாய்களை கண்டு அஞ்சுகின்றனர். ஆனால், தடாகம் மற்றும் மாங்கரை மக்கள் யானைகளைக் கண்டு அஞ்சுகின்றனர்." என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
மேலும், இது தொடர்பாக பல புகார்கள் அளிக்கப்பட்டும் தங்களது அச்சத்திற்கு அரசு பதிலளிக்கவில்லை என்றும், பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.