நீலகிரி: குன்னூர் 'டீசர்வ்' தேயிலை ஏலத்தில் விற்பனை அதிகரித்து, மொத்த வருமானத்திலும் கூடுதலாகி வருவது விவசாயிகள் மத்தியில் மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் கூட்டுறவு தேயிலை மையத்தில் நடந்த, 41-வது ஏலத்தில், இலை ரகம் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 400 கிலோவும், டஸ்ட் ரகம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 556 கிலோ என, மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரத்து 956 கிலோ விற்பனைக்கு வந்தது.

இதில் 99.36 சதவீதம் இலை ரகமும், 100 சதவீதம் 'டஸ்ட்' ரகமும் விற்பனையாகியது.
கடந்த வாரம், கிலோவுக்கு, 80.65 ரூபாய் சராசரி விலை கிடைத்த நிலையில், இந்த வாரம், 80.19 ரூபாய் கிடைத்தது.
குந்தா, இத்தலார் தொழிற்சாலைகளின் இலை ரகமும் பந்தலுார் தொழிற்சாலையின் டஸ்ட் ரகமும் அதிகபட்சம் ஏலத்திற்கு வந்தன.

கடந்த 40-வது ஏலத்தில் ஒரு கோடியே, 79 லட்சத்து 54 ஆயிரத்து 259 ரூபாய்க்கு தேயிலை துாள் விற்பனையான நிலையில், 41-வது ஏலத்தில் , 2 கோடியே 24 லட்சத்து 79 ஆயிரத்து 331 ரூபாய்க்கு விற்பனையானது.
அதில், 45 லட்சத்து 25 ஆயிரத்து 72 ரூபாய் மொத்த வருமானத்தில் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த விற்பனையின் மூலம் கூட்டுறவு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை கிடைக்க வாய்ப்பிருப்பதாக்க விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.