திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் 51 -வது வார்டுக்குட்பட்டு பெரிச்சிபாளையம், திரு.வி.க., நகர், வினோபா நகர், அண்ணமார் காலனி, கோபால் நகர், பட்டுக்கோட்டையார் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

பெரிச்சிபாளையத்தில் உள்ள சுடுகாடு இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இங்கு திருப்பூர் மாநகராட்சி சார்பில் குப்பை அரவு இயந்திரம் அமைக்க கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது.
பெரிச்சிபாளையத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் நிலையில், சுடுகாட்டுக்கு மிக அருகிலேயே குடியிருப்பு பகுதிகள் , பள்ளிக்கூடம், கோவில்கள் உள்ளன.

இதனால் இங்கு குப்பை அரவு இயந்திரம் அமைக்கப்படக் கூடாது என கூறி நேற்று அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் பெரிச்சிபாளையம் சுடுகாட்டில் திரண்டனர்.
அவர்கள் அங்கு வந்த மாநகராட்சி வாகனங்களை சிறைபிடித்து முற்றுகையிட்டனர். தொடர்ந்து, திரு.வி.க நகர்-பெரிச்சிபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் எக்காரணம் கொண்டும், இந்த பகுதியில் குப்பை அரவு இயந்திரம் அமைக்கக் கூடாது என்றும், எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.
இதையடுத்து மாநகராட்சி அலுவலர் கவுரி சுந்தரம் குப்பை அரவு இயந்திரம் பெரிச்சிபாளையத்தில் அமைக்கப்படமாட்டாது என எழுதிக் கொடுத்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.