கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் மூர்த்தி. தற்போது தமிழக காவல்துறையின் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸின்(சத்தியமங்கலம்) கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் மூர்த்தி. தற்போது தமிழக காவல்துறையின் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸின்(சத்தியமங்கலம்) கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது குடும்பத்துடன் நேற்று கோவையிலிருந்து காரில் மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அரியலூருக்கும்-தஞ்சாவூருக்கும் இடைப்பட்ட பகுதியில் அவர்களது காரை வழி மறித்த காவலர் ஒருவர் மூர்த்தியை ஒருமையில் தரக்குறைவாக பேசியுள்ளார்.
அப்போது தான் காவல் கண்காணிப்பாளர் என சொல்லியும் விடாப்பிடியாகப் பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், பொதுமக்கள் மத்தியில் அவமானப்படுத்தும் வகையிலும் செயல்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மூர்த்தி ஐ.பி.எஸ் ஊடகங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் விளக்கம் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள விவரம் பின்வருமாறு:-
என்னையும் என் குடும்பத்தையும் அவதூறாக பேசி பொது இடத்தில் மிரட்டல் விடுத்த காவலர் கைலியில் அங்கு நிற்பதற்கு எந்த தேவையுமில்லை.

நான் அவர்களிடம் "தம்பி நான் எஸ்.பி, மரியாதையா பேசுங்க" எனச் சொன்னேன். அப்போது கைலி அணிந்திருந்தவர் "எஸ்.பின்னா எனக்கென்னடா" என அவமரியாதையாகப் பேசினார். நான் காரில் உட்கார்ந்துகொண்டே" பேசரது சரியில்லை என்றேன்.
அப்போதும் அந்த கைலி அணிந்த நபர் காரை விட்டு கீழே இறங்கிப் பாருடா என கத்தினார். அதற்குள் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த எனது கோபிரதர் மறுபக்கமாக இறங்கியவுடன், நானும் எனது பக்கமாக இறங்கினேன். கீழே இறங்கிய எனது கோபிரதர் அவரைப் புகைப்படம் எடுத்தார்.

அதைத் தெரிந்துகொண்ட அவர் உடனே தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு செல்லும் போது, "நீ அந்தப் பக்கமாகத்தானே வரணும் பப்ளிக்க கூட்டி ஒன்னைய என்ன செய்றேன் பாரு." எனக் கத்திக்கொண்டே சென்றார்.
பின் நான் திருவிடைமருதூர் டி.எஸ்.பி ராமச்சந்திரன் வரும்வரை காத்திருந்து அவரிடம் நடந்தைச் சொல்லி தேவையானல் புகார் தருகிறோம் எனக்கூறிவிட்டு நாங்கள் அங்கிருந்து சென்றுவிட்டோம்.
என்று தெரிவித்துள்ளார்.
தற்போது மரியாதைக் குறைவாக பேசியதாக எஸ்.பி மூர்த்தி கொடுத்த புகாரின் பெயரில் காவலர் நாடிமுத்து என்பவரை ஆயுதப்படைக்கு மாற்றி தஞ்சை எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சாதாரண உடையில் இருந்த நபர் யார் என்பதையும் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.