நீலகிரி : நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்பட்டுள்ள குளு, குளு காலநிலையினை சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர்.
நீலகிரி : நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையினால் ஏற்பட்டுள்ள குளு, குளு காலநிலையினை சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர்.
உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்தது. இந்த நிலையில், மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது மூடு பனியும் உருவாகி வருகிறது. இதனால், இங்குள்ள சுற்றுலாத்தலங்களான தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ் போன்ற பகுதிகளில் உள்ள காட்சி முனைகளைக் காணமுடியாத சூழல் நிலவுவியது. மேலும், வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே சாலைகளில் செல்கின்றனர்.
தொடர் விடுறையை மகிழ்ச்சியாக செலவிட இந்த மழை தடையாக இல்லாமல் இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பரவலாகக் காணப்பட்டனர். பரவலான இந்த மழையின் காரணமாக தொடர்ந்து குளு, குளு காலநிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.