கோவை : கோவை அரசு கலை கல்லூரியில் வளாகத்தில் மாணவர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுவதாக, அண்மையில் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவி மாலதி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பிறந்தநாள் விழாவை கோவை அரசு கலைக்கல்லூரியில் கடந்த மாதம் 28-ம் தேதி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, அதேமேடையில் கல்லூரியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாணவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், இதன் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி மாலதி மட்டும் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதைக் கண்டிக்கும் விதமாக கோவை அனைத்து மாணவர் இயக்கங்களின் கூட்டி இயக்கத்தினர், கோவை சாய்பாபா காலனியில் சிறப்புக் கூட்டம் நடத்தினர். இதில், கோவை அரசு கலைக் கல்லூரியில் சுத்தமான குடிநீர், கழிப்பறை, உணவகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதேபோல, மாணவர் விடுதியில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். மாணவி மாலதி மீதான சட்டவிரோத இடைநீக்கத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இந்தக் கூட்டத்தில் புரட்சிகர மாணவர் முன்னணி, கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு மாணவர் இயக்கத்தினர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, கோவை அனைத்து மாணவர் இயக்கங்களின் கூட்டியக்கம் சார்பில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் கருத்துரிமைக்கு எதிராக செயல்படும் கல்லூரி நிர்வாகங்களைக் கண்டித்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
மேலும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி மாலதி நம்மிடம் கூறியதாவது:- சமீபகாலமாக போராடக்கூடிய மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுகிறது. நாங்கள் பகத்சிங்கின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினோம். இதையொட்டி, கல்லூரியில் அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினோம். இதற்காக என்னை இடைநீக்கம் செய்து விட்டனர். மேலும், தொடர்ந்து உரிமைக்காகப் போராடும் மாணவர்கள் கல்லூரி நிர்வாகங்களால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். என் மீது இடைநீக்கம் செய்ததற்கான விசாரணை கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. அதில், கல்லூரி நிர்வாகத்தினரின் முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட எனது நகர்வு இருக்கும், என்றார்.