மேட்டுப்பாளையத்தில் தரைப்பாலத்தில் அடைப்பு : கிராமத்திற்குச் செல்லும் வழியை சூழ்ந்த கழிவு நீரால் கிராம மக்கள் அவதி

கோவை : மேட்டுப்பாளையத்தில் இருக்கும் தரைப்பாலத்தில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக, கிராமத்திற்கு செல்லும் சாலையை கழிவு நீர் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் இருக்கும் தரைப்பாலத்தில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக, கிராமத்திற்கு செல்லும் சாலையை கழிவு நீர் ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி கருப்பராயன் குட்டை. இந்த கருப்பராயன் குட்டை பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் நகர் பகுதிக்குச் சென்றுவர நடுரையும், கருப்பராயன் குட்டை பகுதியினை இணைக்கும் இணைப்புசாலை ஒன்று உள்ளது. நீரோடையினை ஒட்டி அமைந்துள்ள இந்த சாலையின் நடுவே தரைப்பாலம் உள்ளது.

கடந்த மாதம் பெய்த மழையினால் தரைப்பாலத்திற்கு அடியில் குப்பைகளும், சேறும், சகதியும் சேர்ந்து தேங்கியதால் தரைப்பாலம் அடைப்பு ஏற்பட்டது. இந்த நீரோடையில் நகராட்சி பகுதியின் சில பகுதியின் கழிவு நீரும், சிக்கதாசம்பாளைய ஊராட்சியின் கழிவு நீரும், இந்த ஓடையில் கலப்பதால் சாக்கடை கழிவு நீர் மழைநீருடன் சேர்ந்து தரைப்பாலத்திற்கு மேலே செல்கிறது. இதனால், அந்த சாலை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து 3 அடிக்கும் மேல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக இப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் தாண்டி செல்ல முடியாமல் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர்.



இந்த சாலையில் பராமரிப்பு பணி ஒப்பந்த பொறுப்பு காலம் 31.6.2019 வரை கரூரைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் பி.ராஜேந்திரனுக்கு ஒதுக்கப்பட்டதாக போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அதனை பாதியில் விட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஊராட்சி நிர்வாகமே அதனை கவனித்து வருவதாகத் தெரிகிறது.

இது குறித்து பல முறை ஊர் மக்கள் புகார் அளித்தும் அதனை ஊராட்சி நிர்வாகம் பல்வேறு நிர்வாகக் காரணங்களால் தட்டி கழித்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் அந்த இடம் முற்றிலும் சாக்கடை நீர் சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



இது சம்பந்தமாக எந்தத் துறையில் புகார் மனுவை தந்தாலும் அது எங்கள் துறையை சார்ந்தது அல்ல என அரசுத்துறை அதிகாரிகள் பொறுப்பை தட்டிக் கழிக்கின்றனர். மக்கள் போராடினால் தான் தீர்வு வருமா..? போராட்டம் வெடிக்க அரசே வழி கோலுகிறது எனக் கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தற்போது, டெங்கு காய்ச்சல் பன்றிக்காய்ச்சல் தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. அதைத் தடுக்க சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாக சொல்கின்றனர். ஆனால், இங்கு டெங்கு காய்ச்சல், மலேரியா, பன்றிக்காய்ச்சலை அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் பரப்பி வருகின்றனர்.

அப்பகுதியில் ஏற்கனவே பல்வேறு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இது மேலும் மேட்டுப்பாளையம் நகரம் முழுவதும் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே, போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த வேண்டும். இல்லையெனில், அப்பகுதி மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் தடுக்க முடியாததே.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...