சென்னை : கட்சி தொடங்குவதற்கான பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டதாகவும், டிச.,12-ல் கட்சி குறித்த அறிவிப்பு இருக்காது எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டிச.,12-ம் தேதி கட்சி குறித்து அறிவிப்பு இருக்காது. கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. நேரம், காலம் பார்த்து கட்சி தொடங்கப்படும். 'மீடூ' விவகாரம் பெண்களுக்கு சாதகமானது. அதனைப் பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு ஐதீகம், சடங்கு இருக்கும். அதில், தலையிடாமல் இருப்பதே நல்லது. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது எனது நிலைப்பாடு குறித்து தெரிவிக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.