நீலகிரி : ஆயுதபூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களில், உதகை தாவரவியல் பூங்காவினை மட்டும் 32 ஆயிரத்து 783 சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து சென்றுள்ளனர்.
நீலகிரி : ஆயுதபூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களில், உதகை தாவரவியல் பூங்காவினை மட்டும் 32 ஆயிரத்து 783 சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து சென்றுள்ளனர்.

ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகளின் தொடர் விடுமுறை காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து உதகைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக, தாவரவியல் பூங்காவினை மட்டும் 32 ஆயிரத்து 783 சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து சென்றுள்ளனர். தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இருந்த காரணத்தினாலும், அரசு அலுவலகங்கள் விடுமுறை காரணமாகவும், சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, தொட்டபெட்டா தாவரவியல், பூங்காபடகு இல்லம், ஆறாவது மெயில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அதிகமாக இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதால் சுற்றுலாத்தொழிலை நம்பி உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில் தற்போது அசாதாரமான சூழ்நிலை நிலவும் நிலையில், கேரள மக்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
