வனவிலங்குகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறுமுகை வனப்பகுதி நீர்நிலைகளில் உப்பு கட்டிகள் வைக்கும் பணிகள் தீவிரம்

கோவை : சிறுமுகை வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை தடுத்து எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில், நீர்நிலைகளில் உப்பு கட்டிகளை வைக்கும் பணியை வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : சிறுமுகை வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களை தடுத்து எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில், நீர்நிலைகளில் உப்பு கட்டிகளை வைக்கும் பணியை வனத்துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனச்சரக பகுதிகள் நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ள காடுகள் என்பதால், இங்கு யானை, மான், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக, சிறுமுகை வனப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தையும், நீலகிரி வனப்பகுதியினை இணைக்கும் வனப்பகுதியாகவும் திகழ்வதால், தாவர உண்ணிகள், ஊண் உண்ணிகளும் அதிகம் உள்ளன. தற்போது, மழைக்காலம் என்பதால் காடுகளில் உள்ள நீர் நிலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த நீர்நிலைகளை தேடி வந்து தண்ணீர் அருந்தும் வன விலங்குள் மற்றும் யானை உள்ளிட்ட பேரூயிரனங்களுக்கு குடல் புழு நோய் போன்ற தொற்று நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, அதனை தடுக்க வனத்துறையினர் உப்பு கட்டிகளை நீர்நிலைகளில் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோகரன் தலைமையில் வனத்துறையினர் சிறுமுகை வனத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் வேட்டை தடுப்பு காவலர்களை கொண்டு இந்த பணியினை முடுக்கி விட்டுள்ளனர். தண்ணீரினை தேடி வரும் வன விலங்குகள் இந்த உப்பு கட்டிகளை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வன விலங்குகள் உயிரிழப்பது தடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...