நீலகிரி : குன்னூர் அருகே காட்டெருமை தாக்கியதில் தேயிலை தோட்ட தொழிலாளி பலத்த காயங்களுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சட்டன் எஸ்டேட்டில் 100-க்கும் மேற்பட்ட தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல, இங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் இலைப் பறித்துக் கொண்டிருந்தபோது தோட்டத்திற்குள் புகுந்த காட்டெருமை சுசிலா (50) என்பவரை துரத்தி தாக்கியுள்ளது. இதில், படுகாயம் அடைந்த அவரை சக எஸ்டேட் தொழிலாளர்கள் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இப்பகுதியில் தொடர்ந்து முகாமிட்டுள்ள காட்டெருமைளை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.