பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் ரயில் மோதிய கோரவிபத்தில் ரயில் மோதி 50 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோடா பதக்கில் ரயில் மோதிய கோரவிபத்தில் ரயில் மோதி 50 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
ஜோடா பதக்கில் தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. விழாவில் ராவண வதத்தின் போது, ராவண உருவபொம்மையில் இருந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் , மக்கள் அலறியடித்து ரயில்வே கேட் நோக்கி ஓடினர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் தண்டவாளத்தின் அருகே ஏராளமானோர் நின்றிருந்தனர். சிலர் தண்டவாளத்தை கடந்து மற்றொரு பக்கம் செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக 27வது ரயில்வே கேட் வழியாக புறநகர் ரயில் எண் 74943 சென்றது. பட்டாசு சத்தத்தினால் ரயில் வந்த சத்தம் மக்களுக்கு கேட்கவில்லை.

இதனால், ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி வேகமாக சென்ற இந்த ரயில் தண்டவாளத்தின் ஓரத்தில் நின்றிருந்த மக்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 50 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.