நீலகிரி: உதகையில் உள்ள கோடப்பமந்து கால்வாயில் தேங்கிய மூன்றுடன் 'பிளாஸ்டிக்' கழிவுகள் அகற்றப்பட்டதாகவும் மீண்டும் மீண்டும் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொட்டப்படுவதால் கட்டுப்படுத்துவதில் சிரமம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உதகை நகரின் மையப்பகுதியில் கோடப்பமந்து கால்வாய் செல்கிறது. இக்கால்வாயின் இருபுறங்களிலும் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன.
இவற்றில் இருந்து வெளியாகும் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் கோடப்பமந்து கால்வாயில் கொட்டப்படுகின்றன. இவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டு படகு இல்ல ஏரியில் கலப்பதால் படகு இல்ல ஏரியில் உள்ள தண்ணீர் துர்நாற்றம் வீசுவது வாடிக்கையானதாக இருந்தது.

இந்நிலையில், கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து முதற்கட்டமாக, ரயில் நிலையத்தின் கீழ்புறத்தில், கால்வாயில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வேளாண் பொறியியல் துறையினர் ஈடுபட்டனர்.
மொத்தமாக மூன்று டன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. இது குறித்து நகராட்சி பொறியாளர் ரவி கூறுகையில், "இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை மீண்டும் மீண்டும் கொட்டுவதால் தொடர்ந்து தண்ணீர் மாசுபடுகிறது. இனி கால்வாயில் கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.