பட்டியல் இன மக்களை முப்பது ஆண்டுகளாக ஊருக்குள் விடாத அவலம்: காங்கயம் வட்டாட்சியர் ஆய்வு

திருப்பூர்: காங்கயம் அருகே, ஊரின் மேற்குத் திசையில் பட்டியல் இனத்தவர் குடியிருந்தால், ஊருக்கு ஆகாது எனக் கூறி அப்புறப்படுத்தப்பட்ட மக்களை அதே இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கயம் வட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, வட்டாட்சியர் நேற்று (வியாழக்கிழமை) ஆய்வு மேற்கொண்டார்.

காங்கயம் தாலுகா, நிழலி ஊராட்சிக்கு உள்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் 20 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், கடந்த 1988-ஆம் ஆண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. 

இதனையடுத்து, இவர்கள் அங்கு குடிசைகள் அமைத்து குடியிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர் சிலர் வந்து, தாழ்த்தப்பட்ட மக்கள் ஊரின் மேற்குத் திசையில் குடியிருந்தால் தீட்டுப்பட்டு விடும் எனக் கூறி, இம்மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டார்கள்.

இந்த சம்பவம் நடந்து 30 ஆண்டுகளாகியும் இன்று வரையில் இவர்கள் அங்கு குடியேற முடியவில்லை என, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் காங்கயம் வட்டாட்சியரிடம் புதன்கிழமை புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், சம்மந்தப்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதிக்கு காங்கயம் வட்டாட்சியர் மகேஸ்வரன் வியாழக்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது நிலத்தை மீட்டு, இதே இடத்தில் குடியிருக்க வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு வட்டாட்சியர், "இன்னும் ஒரு வாரத்தில் நில அளவையர் மூலம் அளவீடு மேற்கொண்டு, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார். இந்த ஆய்வின்போது ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...