கோவை: சுக்ரவார் பேட்டையில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் திருவிழா நடைபெற்றது.
கோவை: சுக்ரவார் பேட்டையில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ரத்தம் சொட்டச் சொட்ட கத்தி போடும் திருவிழா நடைபெற்றது.

டவுன்ஹால் அருகே சுக்ரவார் பேட்டையில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் அம்மனை அழைப்பதற்காக இந்தக் கோவிலுக்குப் பாத்தியப்பட்ட 15 செட்டிமை மக்கள் கத்தி போடும் திருவிழாவை நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) பூ மார்க்கெட்டில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் இந்த கத்தி போடும் திருவிழா ஊர்வலம் துவங்கியது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் "வேசுக்கோ... தீசுக்கோ..." என்று பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் கத்தியால் உடலை வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.

ரத்தம் சொட்டச் சொட்ட ஊர்வலம் சென்ற பக்தர்கள் அந்த வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை ஒற்றி வைத்துக் கொண்டு, தொடர்ந்து பாடிக்கொண்டு சென்றனர். அந்த பொடியை வைத்தால் மூன்று நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பின்னர் அந்த ஊர்வலம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் முடிவடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு விசேஷ பூஜை நடத்தப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது.