நீலகிரி: கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை மண் வயல் மற்றும் அதன் அருகாமை கிராமங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். ஆனால், வனத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தொடர்ந்து அங்கு சுற்றிவரும் ஒற்றை ஆண் யானை அங்குள்ள பலா மரத்தில் இருந்து பிஞ்சுளை பறித்து உண்டு வருவதை சிலர் தங்களது செல்போனில் படமெடுத்து வனத்துறைக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த கிராமத்தை சுற்றி அகழி வெட்டி கிராம மக்களை வனத்துறையினர் காப்பாற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கிராம மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.