சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர பெண் செய்தி வாசிப்பாளர் கவிதா மற்றும் மற்றொரு பெண்ணும் சபரிமலைக்கு சென்றுள்ளனர். கவிதாவுடன் செல்வது ரஹானா பாத்திமா என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், காவல்துறை பாதுகாப்பு உடுப்புடன் சபரிமலை சன்னிதானத்தை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.
இருவரும் சன்னிதானத்திற்கு வருவதை எதிர்த்து அய்யப்ப பக்தர்கள் அங்கு போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறார்கள்.
இருப்பினும் அய்யப்ப பக்தர்கள் பெண்களை பிரவேசிக்க அனுமதிக்க மாட்டோம் என ஸ்திரமாக கூறி போராட்டம் மேற்கொண்டு உள்ளனர். போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. சன்னிதானத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் பெண்கள் இருவரும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.