திருப்பூர் : திருப்பூரில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு போலி ஆதார் மற்றும் பான் கார்டுகளை தயாரித்துக் கொடுத்த இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
திருப்பூர் : திருப்பூரில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு போலி ஆதார் மற்றும் பான் கார்டுகளை தயாரித்துக் கொடுத்த இருவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
திருப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த அண்டை மாநிலமான வங்கதேச நாட்டைச் சேர்ந்த அலமின், அஸ்ரபுல் இஸ்லாம், பர்கத் உசேன் உட்பட 8 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர், அவர்களிடம் இருந்து போலியான ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவிநாசியைச் சேர்ந்த சபரிமுத்து என்கிற சைமன் உதவியோடு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரேம் சீஸ்ச வர்மா என்பவரிடம் போலியான ஆதார் மற்றும் பான் கார்டுகள் தயாரித்து பெற்றது தெரியவந்தது.
அந்தப் போலி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு திருப்பூரில் சிம்கார்டு மற்றும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்துள்ளனர். வங்கதேச இளைஞர்களைக் கைது செய்தவுடன் தலைமறைவான பீகாரை சேர்ந்த ரேம் சீஸ்ச வர்மாவை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ரேம் சீஸ்ச வர்மா பீகாரிலிருப்பதை அறிந்த திருப்பூர் காவல்துறையினர் பீகார் சென்று கைது செய்து வந்தனர். தொடர்ந்து, இந்த விவகாரத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, பெங்களூருவில் இருந்து வந்த ஆதார் அதிகாரிகளும், ரேம் சீஸ்ச வர்மாவிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.