சிங்காநல்லூர் குளத்தில் பல்லுயிர்களின் கற்சிற்பங்கள் திறப்பு

கோவை : இயற்கைக் கல்வியை மேம்படுத்தும் வகையில் கோவை சிங்காநல்லூர் குளத்தில் பல்லுயிர்களின் கற்சிற்பங்கள் திறக்கப்பட்டுள்ளது.

கோவை : இயற்கைக் கல்வியை மேம்படுத்தும் வகையில் கோவை சிங்காநல்லூர் குளத்தில் பல்லுயிர்களின் கற்சிற்பங்கள் திறக்கப்பட்டுள்ளது. 



கோவை மாவட்டத்தில் பயிலும் மாணவர்களிடம் இயற்கை கல்வியை மேம்படுத்துவதற்காக கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, சிங்காநல்லூர் குளக்கரையில் கற்களுக்கு வர்ணம் பூசப்பட்டு, பல்லுயிர்களின் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குளங்களைச் சுற்றிலும், மலர்கள் மற்றும் வனவிலங்குகளின் சிற்பங்களும் உண்மை தோற்றத்தைப் போலவே சித்தரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மாணவர்கள் வனவிலங்குகளின் உடல் அமைப்புகளை எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.



இந்த நிலையில், 10 கற்சித்திரங்கள் மற்றும் 2 சிற்பங்களை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் டி. வெங்கடேஷ் மற்றும் சலிம் அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் சார்பில் கே. சங்கர் ஆகியோர் இந்த சிற்பங்களை திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.

இது குறித்து குயிப் அமைப்பின் இயற்கை கல்வி அலுவலர் எஸ். வருண் கூறுகையில்,"தமிழத்தின் இயற்கை சின்னங்களான மாநிலம் மரம் (பனை), மாநில பறவை (மரகதப்புறா) மற்றும் மாநில விலங்கு (வரையாடு) ஆகியவற்றையின் வரலாற்றையும் போக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கற்சிற்பங்களும் 5 அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட கற்சித்திரங்கள் இந்தக் குளத்தை சுற்றி ஒருங்கிணைப்பாளர்களால் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போது தற்காலிகமானதுதான். எதிர்காலத்தில் நீண்ட இடைவேளைக்கு ஒரு கற்சிற்பம் நடப்படும்," இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...