வி.கே.கே., மேனன் சாலையில் அப்புறப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களுக்கு நிச்சயம் மாற்று இடம் வழங்கப்படும் : அமைச்சர் உறுதி

கோவை : வி.கே.கே., மேனன் சாலையில் அப்புறப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களுக்கு நிச்சயம் மாற்று இடம் வழங்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதியளித்துள்ளார்.

கோவை : வி.கே.கே., மேனன் சாலையில் அப்புறப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புதாரர்களுக்கு நிச்சயம் மாற்று இடம் வழங்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதியளித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- கோவை நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, சாலையோரத்தில் இருந்தவர்களுக்கு 60 ஆண்டுகளாகப் பட்டா, வீடு இல்லாமல் இருந்தவர்களுக்கு கீரணத்தம், அறிவொளி நகர், வெள்ளலூர் பகுதிகளில் வீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் பல பேர் உள்ளதால் அடுத்தகட்டமாக வழங்கப்படும். சித்தாபுதூர் வி.கே.கே.,மேனன் சாலையில் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்தவர்கள் தகுதி உள்ளவர்களாக இருந்தால், அந்த 54 பேருக்கு மாற்று இடம் நிச்சயமாக வழங்கப்படும்.

பேரூர் அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் ஊடகங்களின் கேமராக்கள் தாக்கப்பட்டதாக தகவல் ஏதும் தனக்கு வரவில்லை. இருப்பினும், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். நிறைய ஊடகங்களுக்கு அ.தி.மு.க., அரசு அனுமதி அளித்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் தொலைக்காட்சிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்று தெரியும்," என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...