தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவால் நீலகிரி மலைரயில் இன்று ரத்து : நடுக்காட்டில் பயணிகள் அவதி

நீலகிரி : தொடர் மழையினால் ரயில் தண்டவாளத்தில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், சீரமைப்பு பணிகளுக்காக நீலகிரி மலைரயிலின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி : தொடர் மழையினால் ரயில் தண்டவாளத்தில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், சீரமைப்பு பணிகளுக்காக நீலகிரி மலைரயிலின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதைக்கு நாள்தோறும் காலை 7.10 மணிக்கு நீலகிரி மலைரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இந்த மலைரயிலில் பயணித்து இயற்கை அழகைக் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒருவார காலமாக மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு, நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மலைரயில் செல்லும் பாதையில் மண்சரிவுகள் ஏற்பட்டு, ஆடர்லி என்ற இடத்தில் இருக்கும் தண்டவாளப்பாதை சேதமடைந்துள்ளது. 



இதனால், மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளோடு புறப்பட்ட மலைரயில் கல்லார் மற்றும் அடர்லி ரயில் நிலையங்களுக்கிடையே நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது. இருப்புப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளை சீரமைக்கும் பணியில் 25-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், சுமார் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக சுற்றுலாப் பயணிகள் நடுக்காட்டில் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். 



இதனிடையே, மலைரயிலின் தண்டவாளப்பகுதி சேதமடைந்து விட்டதாலும், மண்சரிவு மற்றும் பாறைகளை அகற்றி சீரமைப்பு செய்யும் பணிகள் தாமதமானதாலும் இன்று மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. வனப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மலைரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கே திருப்பி கொண்டு வரப்பட்டது. முன்னதாக, ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கல்லார் ரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டு அங்கிருந்து அரசு பேருந்துகள் மூலம் உதகைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...