மாற்று இடம் வழங்காததால் நடுத்தெருவில் நிற்கிறோம்' : ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளை நிறுத்த குடிசைவாழ் மக்கள் கோரிக்கை

கோவை : மாற்று இடம் வழங்காத நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட வி.கே.கே. மேனன் சாலையில் ஆக்கிரமித்துள்ள குடிசை வீடுகளை இடிக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோவை மாநகராட்சி ஆணையரிடம் குடிசைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : மாற்று இடம் வழங்காத நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட வி.கே.கே. மேனன் சாலையில் ஆக்கிரமித்துள்ள குடிசை வீடுகளை இடிக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோவை மாநகராட்சி ஆணையரிடம் குடிசைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 52க்கு உட்பட்ட வி.கே.கே மேனன் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து, இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் அதன் அருகில் உள்ள குடிசை வீடுகள் இன்று இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி கட்டிடங்கள் சிதிலமடைந்து, எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. இதன் அருகில் 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளும் உள்ளன.



அடுக்குமாடி கட்டிடம் இடிந்துவிழும் பட்சத்தில் குடிசைகள் அமைந்துள்ள பகுதியிலும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பழுதடைந்த அடுக்குமாடி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கட்டிடங்கள் உருவாக்கிட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் திட்டமிடப்பட்டு, கடந்த ஆறு மாதங்களாக நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட குடிசைகளை இடிக்கும் பணிகளை அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர்.

மேலும், இடிக்கப்பட்ட குடிசைகளில் வசித்து வந்த 279 நபர்களுக்கு கீரணத்தம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அப்பகுயில் சுமார் 40 ஆண்டுகளாக வசித்து வரும் 53 நபர்களுக்கு மாற்று வசிப்பிடம் ஒதுக்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு வந்த குடியிருப்புவாசிகள் கோவை மாநகராட்சி ஆணையாளர் க.விஜயகார்த்திகேயனை நேரில் சந்தித்து மாற்று இடம் வழங்கும்வரை இடிக்கும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை வைத்தனர்.



இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முருகேசன் கூறியதாவது :- பல வருடங்களாக சித்தாபுதூர் பகுதியில் வசித்து வரும் 53 தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளை அகற்றுவதற்கு முன்னர் மாற்று இடங்கள் வழங்கிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. 300-க்கும் மேற்பட்ட குடிசைகளில் வசிக்கும் மக்களில் 53 நபர்களுக்கு மட்டும் மாற்று இடம் வழங்கப்படாமல் உள்ளது. இதனையடுத்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 22 நபர்களுக்கு வீடு ஒதுக்குவது குறித்த விசாரணை வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், மாநகராட்சி மற்றும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் குடியிருப்புகளை இடித்துள்ளனர். இதனால் தற்காலிகமாக தங்குவதற்கு மாற்று இடமில்லாமல் அவதிப்பட்டு வருகின்றோம். விசாரணைக்கு முன்னர் வீடுகளை இடித்தது சட்டப்படி குற்றமாகும். எனவே, உரிய இழப்பீடு மற்றும் மாற்று இடம் வேண்டி சட்டப் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம், என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...