ஊடக செய்தி எதிரொலி : 5 நாட்களாக அலைக்கழிக்கப்பட்ட மூதாட்டியை சிகிச்சைக்காக அனுமதித்த கோவை அரசு மருத்துவமனை

கோவை : கடந்த 5 நாட்களாகப் புற்றுநோய் சிகிச்சை பெறுவதற்காக அலைக்கழிக்கப்பட்டு வந்த ஈரோட்டைச் சேர்ந்த மூதாட்டி குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், தற்போது அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோவை : கடந்த 5 நாட்களாகப் புற்றுநோய் சிகிச்சை பெறுவதற்காக அலைக்கழிக்கப்பட்டு வந்த ஈரோட்டைச் சேர்ந்த மூதாட்டி குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், தற்போது அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் உதய நாயகமின் (64) என்பவரின் மனைவி சிசிலியா மேரி (53). இவர், கடந்த சில மாதங்களாகவே புற்று நோயினால் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தீவிர சிகிச்சைக்காக கடந்த 10-ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், இந்த மூதாட்டிக்கு போதிய சிகிச்சைகளைக் கொடுக்காத மருத்துவர்கள், பல்வேறு காரணங்களைக் காட்டி 5 நாட்களாக அலைக்கழித்து வந்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்ற முனைப்பில், குடும்பத்தினரும் 70 கி.மீட்டரை கடந்து அழைத்து வந்தனர். 

மருத்துவர்களின் இந்த மனித நேயமற்ற செயல்பாட்டை நேற்று சிம்பிளிசிட்டியில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதேபோல, பல்வேறு தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை மருத்துவமனையில் இன்று அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால், அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.

பாதிக்கப்படும் நோயாளிகளுக்கான தீர்வை ஒவ்வொரு முறையும் ஊடகங்களில் செய்தி வெளியிட்டு நடவடிக்கைகள் எடுப்பதை விட, மருத்துவர்கள் தாமாகவே மனிதநேயத்தோடு செயல்பட்டால் அனைவருக்கும் நன்மை பயக்கும்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...