நீலகிரி: நீலகிரி மாவட்ட கேரளா-தமிழ்நாடு எல்லையோரங்களில் கடந்த சில தினங்களாக மாவோயிஸ்டு நடமாட்டம் அதிகரித்துள்ளது.

பாலக்காடு, மலப்புரம், வயநாடு போன்ற வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிகளுடன் பதுங்கியுள்ளனர். தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் உள்ள மக்களை மிரட்டி உணவுப் பொருட்களை எடுத்துச்செல்வதாக தகவல்கள் வருவதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட கேரளா எல்லையோர பகுதிகளில் அதிரடி படையினர் மாவோயிஸ்டுகள் நீலகிரி வனப்பகுதிக்குள் ஊடுருவி கிராமத்திற்குள் வருவதைத் தடுக்கவும், ஏற்கனவே மாவோயிஸ்டுகள் குன்னூர் அருகேயுள்ள 'நெடுகல்கம்பை' ஆதிவாசி கிராமத்திற்குள் வந்து உணவுகளை சாப்பிட்டு பல மணி நேரம் தங்கி சென்றதைத் தொடர்ந்து அதிரடி படையினர் அப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் அங்கு எங்காவது பதுங்கியுள்ளார்களா? என தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி கேரளா அட்டப்பாடி புதூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மாவோயிஸ்டு இயக்க தலைவர் டேனிஷ் என்பவரை அகழி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட டேனிஷ் விசாரணையில் கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் என தெரியவந்தது.

அவரை ரகசிய இடத்தில் வைத்து கேரளா போலீசார் விசாரித்தனர். அப்போது, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கொரில்லா தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் நீலகிரி மாவட்டத்திற்குள் ஊடுருவுவதை தடுக்கவும், கேரளா தமிழ்நாடு எல்லையோர பாதுகாப்பை பலப்படுத்தவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆலோசனைப்படி இன்று குன்னூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் குன்னூர், பகுதியைச் சேர்ந்த அனைத்து காவல் நிலையங்களைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோருக்கு மாவோயிஸ்ட் தாக்குதலை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் நவாஸ் தலைமையில் துணை ஆய்வாளர் சுரேஷ் செயல் விளக்கப் பயிற்சி அளித்தார்.
இதில் அதிவிரைவுப் படை, நக்சல் தடுப்புப் பிரிவு படையைச் சேர்ந்த போலீசார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.