நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை - கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை: நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை: நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சிங்காநல்லூர் குளக்கரையில் கல் சிற்பங்கள் மற்றும் நகர்ப்புற பல்லுயிரினங்களின் ஓவியங்கள் மாநகராட்சி ஆணையர் இன்று திறந்து வைத்தார். பட்டாம்பூச்சிகள், பறவைகள் மற்றும் ஊர்வனவற்றின் ஓவியங்கள் மற்றும் சிலைகள் இதில் இடம்பெற்றிருந்தன.



தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் பேசுகையில், " நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டுவோர் மீது மாநகராட்சி கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 



ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆறுகளின் கீழ் பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் மேற்பகுதியில் உள்ள குளங்கள் என்று இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்பகுதியில் உள்ள குளங்கள் இயற்கை குளங்கள் என்றும், கீழ் பகுதியில் உள்ள குளங்கள் நகர்ப்புற குளங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நீர்நிலைகள் அருகே சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும். எனவே இளைஞர்கள் தங்களது சுற்றுப்புறத்தைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களை குளங்களை பார்வையிட அழைத்துச் செல்வதன் மூலமாக, அங்குள்ள செடிகள் மற்றும் மலர்கள் குறித்தும், குளங்களை சார்ந்து வாழும் உயிரினங்கள் குறித்தும் அறிந்து கொள்ள வழிவகை செய்ய முடியும்." என்றார்.



தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பேசுகையில், "மாணவர்களுக்கு பனை மரத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் சிறிய அளவிலான பராமரிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். சிங்காநல்லூர் குளக்கரையில் பல்லுயிர் பெருக்கத்தை திறம்பட பராமரித்து வரும் கியூப் அமைப்புக்கு வாழ்த்துக்கள்." என்றார்.

இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...