நீலகிரி : போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து திட்டத்தில் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நீலகிரியும் ஒன்று என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி : போஷன் அபியான் திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து திட்டத்தில் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நீலகிரியும் ஒன்று என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி உதகையிலுள்ள ஆதரவற்றோர் பள்ளியில் நடைபெற்றது. இதில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தின் அவசியத்தையும், அதனை எவ்வாறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் குறித்துப் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
"சத்துள்ள உணவுகளான கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், பேரிச்சை, நெய் போன்ற சத்தான உணவுகளைக் கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை உயரும். மேலும், பிறந்து ஆயிரம் நாட்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்தான உணவு அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்," என்றார் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.

இந்த ஊட்டச்சத்திற்கான உணவுப் பொருட்களுக்கு மாதந்தோறும் ரூ.6 லட்சம் செலவை மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பார் சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.