கோவை: துடியலூர் அடுத்துள்ள கணுவாய் பகுதியில் செங்கல் சூலையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: துடியலூர் அடுத்துள்ள கணுவாய் பகுதியில் செங்கல் சூலையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துடியலூர் அடுத்துள்ள கணுவாயில் இருந்து தாளியூர் செல்லும் வழியில் தடுப்பணை ஒன்று உள்ளது. அதன் அருகே 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடப்பதாக தடாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தடாகம் பகுதியிலுள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வரும் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், கழுத்தில் அருவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதும், கொலை இரவு 12 மணியளவில் நடந்து இருக்கலாம் என்பதும் தெரியவந்தது.
இப்படியிருக்க போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை கொண்டு தடயங்களை சேகரித்து கொலையாளியை தேடி வருகின்றனர். செங்கல் சூளையில் வேலை செய்பவர் கொலை செய்யப்பட்டு இருப்பது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.