கோவை : குனியமுத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கழிப்பறை கட்டும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.
கோவை : குனியமுத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கழிப்பறை கட்டும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.

குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில் சுமார் 1,000-க்கும மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில், பெரும்பாலான மாணவர்கள் தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு நடந்த பிளஸ்-2 பொதுத் தேர்வில் இந்தப் பள்ளி மொத்தம் 95 விழுக்காடு தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்தது.
கல்வியில் சிறந்து விளங்கும் இந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகள் போதிய கழிப்பறை வசதியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்ட கோவை ரோட்டரி கிளப், சுமார் ரூ.3.50 லட்சம் செலவில் புதிய கழிப்பறையை கட்டித்தர முடிவு செய்தது. அதன்படி, இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இன்று முதல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, அடுத்த 10 நாட்களுக்குள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு இந்தக் கழிப்பறை விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பூமி நிகழ்ச்சியில் கோவை ரோட்டரி கிளப் தலைவர் ஆர். சரவணன், செயலாளர் பி. சிவபிரகாஷ் மற்றும் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.