கோவை : மேட்டுப்பாளையம் தென்திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தில் புரட்டாசி பிரமோற்சவ தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி வாரி ஆலயத்தில் புரட்டாசி பிரமோற்சவம் கடந்த அக்டோபர் 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து தினசரி வெங்கடேஸ்வர பெருமாள் பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். மேலும், ஸ்நபன திருமஞ்சனம், முத்துப்பந்தல் ,கல்ப விருட்ச வாகனம் ,சர்வ பூபாள வாகனம் போன்ற விழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.
இந்த நிலையில், பிரமோற்சவ நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வைபவம் இன்று மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியிடன் வலம் வரும் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் மலையப்ப சுவாமி சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளினார். வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க திருத்தேரினை கோவிந்தா, கோவிந்தா கோஷங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரானது நான்கு மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேர், கோவிலை சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது.