நீலகிரி : கூடலூர் அருகே கிராமங்களுக்கு புகுந்து அட்டகாசம் செய்யும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் முகாமிட்டுள்ள 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், அப்பகுதிகளில் உள்ள கிராம மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக, இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதிலும், விவசாயம் செய்வதிலும் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை வனத்துறையினருக்குப் புகார் அளித்திருந்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூடலூர், ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களைச் சுற்றி அகழி வெட்டி பொதுமக்களுக்கு காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரி மண்வயல் பகுதியில் பொதுமக்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.