திருப்பூர்: திருப்பூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் மதிப்பிலான பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் உரிமம் பெறாமல் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் மதிப்பிலான தீபாவளி பட்டாசுகளையும் பறிமுதல் செய்து உரிமையாளரை கைது செய்தனர்.

திருப்பூர் ஏ.பி.டி சாலையில் லிங்கம் (42) என்பவர் மொத்த பலசரக்கு கடை நடத்தி வருகிறார். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவரது குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
பின்னர் 1000 கிலோ எடையுள்ள 20 மூட்டை பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச்சென்றனர். மேலும் அவரது கடையில் சோதனை மேற்கொண்ட போது உரிமம் பெறாமல் தீபாவளி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளையும் மத்திய காவல் நிலைய காவல்துறையினர் பறிமுதல் செய்து உரிமையாளர் லிங்கத்தை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.