கோவை, திருப்பூரில் பைக் திருட்டு : பலே கொள்ளையனை கைது செய்தது மேட்டுப்பாளையம் காவல்துறை

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் திருட்டு போயின.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் திருட்டு போயின.

இதனை கண்டுபிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் மணி தலைமையில் காவல் ஆய்வாளர் சென்னகேசவன், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் காவலர்களை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் செவ்வாயன்று தனிப்படை போலீசார் காவல் ஆய்வாளர் சென்ன கேசவன் தலைமையில் மேட்டுப்பாளையம் டேங்க் மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். 

அப்போது அங்கு வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரனாக பதில் அளித்ததுடன் வாகனத்திற்காக ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் பூம்புகார் நகரை சேர்ந்த ஜெகன் என்கின்ற ஜெகதீஸ் என்பதும் கோவை, திருப்பூர் என பல பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும், அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வாகன திருட்டு சம்பந்தமாக 120 வழக்குகள் உள்ளன. 

பிடிபட்ட குற்றவாளியிடம் இருந்து 13 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...