கோவை சூலூரில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை கத்தியால் குத்தி பணம் பறிப்பு : சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை

கோவை : கோவை சூலூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பணிபுரியும் 3 ஊழியர்களை கத்தியால் குத்தி பணம் பறித்து சென்ற கொள்ளையர்களை பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு சூலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : கோவை சூலூரில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பணிபுரியும் 3 ஊழியர்களை கத்தியால் குத்தி பணம் பறித்து சென்ற கொள்ளையர்களை பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு சூலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சூலூர் அருகே உள்ள முதலிபாளையம் பிரிவிலுள்ள ராஜலிங்கம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கு உள்ளது. அங்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள் பங்கில் பணியில் இருந்த ஒண்டிப்புதூரை சேர்ந்த தேவராஜ் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அவர் சத்தம் போட்டதால் பங்கில் தூங்கிக்கொண்டு இருந்த மற்ற ஊழியர்கள் எழுந்து ஓடி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் தேவராஜை கத்தியால் குத்தி தப்பிச் சென்றனர்.



இதைத்தொடர்ந்து கருமத்தம்பட்டியில் உள்ள சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான மற்றொரு பங்கில் பணியில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ் குமார் மற்றும் தீரன் குமார் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தி பணப்பையை பறித்து சென்றனர். காயமடைந்த தேவராஜ், பங்கஜ்குமார் மற்றும் தீரன்குமார் ஆகிய மூவரையும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல கொள்ளையர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் கேரள மாநில பதிவு எண் கொண்டதால் குற்றவாளி கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...