திருப்பூர் : ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
திருப்பூர் : ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான ஆனைமலையாறு - நல்லாறு அணைத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு பேரணி நடத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர், துணை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் மனு அளித்தனர். இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாசன சங்க விவசாயிகளை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்து அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்திட தமிழக அரசு தயாராக இருக்கிறது. இதற்காக இன்று பாசன சங்க விவசாயிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு, இன்னும் ஒருவார காலத்தில் திட்டத்தின் முழு விவரங்களையும் அறிக்கையாக தயார் செய்து வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. அவை தயாரிக்கப்பட்டவுடன் துறை வாரியாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி விவசாயிகள் மற்றும் துறை ரீதியான அதிகாரிகளோடு முதலமைச்சரை சந்தித்து திட்டம் பற்றி எடுத்துக் கூறப்படும்.

கேரள மக்கள் தமிழக மக்களை தற்போது அதிகளவில் நேசிக்கின்றனர். தமிழக அரசும், கேரள அரசோடு இணக்கமாக இருப்பதால் இத்திட்டத்தை நிறைவேற்ற உதவிகரமாக இருக்கும், என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்