கோவை : வனத்துறையினால் சிறைபிடிக்கப்படும் காட்டு யானைகளை கும்கிளாக மாற்றும் பயிற்சி முகாம் கோவை மாவட்டம் போளுவாம்பட்டியில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை : வனத்துறையினால் சிறைபிடிக்கப்படும் காட்டு யானைகளை கும்கிளாக மாற்றும் பயிற்சி முகாம் கோவை மாவட்டம் போளுவாம்பட்டியில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக வனப்பகுதிகளில் சிறைபிடிக்கப்படும் காட்டு யானைகள், சாடிவயலில் இருக்கும் கும்கி யானைகளின் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த முகாமில் உள்ள வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை வனச் சரகத்திற்குட்பட்ட போளுவாம்பட்டி பகுதியில் மாவட்ட வனத்துறையினால் கும்கி யானைகளுக்குப் பயிற்சி முகாம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வனத்துறையினால் சிறைபிடிக்கப்படும் காட்டு யானைகளுக்கு கும்கிகளாக மாற்றுவதற்கான பயிற்சியை அளிப்பது எளிதாகும்.

நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காட்டின், பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், கோவையில் உள்ள சாடிவயல் உள்ளிட்ட இடங்களில் காட்டு யானைகளுக்கு கும்கி யானைகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக, கும்கி யானைகளின் பயிற்சி முகாமானது, இரண்டு பெரிய அறைகளைக் கொண்டிருக்கும். சிறைபிடிக்கப்படும் காட்டு யானைகள் முதலில் சிறிய அறையில் அடைக்கப்பட்டு, பின்னர், பயிற்சிக்காகப் பெரிய அறைக்கு மாற்றப்படும். முதற்பட்டமாக, பாகனிடம் நட்புறவு ஏற்படுத்தப்படும். பாகன் தனது கையால், அந்த யானைக்கு உணவு அளிக்கும் விதமாக இருதரப்பினரிடையே சுமூக உறவு மேம்படுத்தப்படும். தொடர்ந்து, யானையின் மீது பாகன் ஏறி அமருவதற்கான பயிற்சி கொடுக்கப்படும். அனைத்துப் பயிற்சிகளும் நிறைவடைந்த நிலையில், யானையைப் பராமரித்த பாகனின் அனுமதியின் பேரிலேயே, முகாமில் இருந்து அந்த யானை வெளிக் கொண்டு வரப்படும்.
இது குறித்து வனத்துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது :- பொதுவாக யானைகள் அடைக்கப்படும் கூடாரங்கள் மரங்களிலேயே அமைக்கப்படும். ஆனால், கோவையில் தற்போது உருவாக இருக்கும் புதிய பயிற்சி மையம் கான்கிரீட்டால் கட்டப்பட இருக்கிறது. இதனை காட்டு யானைகளால் எளிதில் தகர்க்க முடியாது. முன்பு, கோவை வனப்பகுதியில் பிடிக்கப்படும் யானைகள், பயிற்சிக்காக 100 கி.மீ. முதல் 130 கி.மீ. வரை தூரமுள்ள முதுமலை அல்லது ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய சூழல் இருந்து வந்தது. என்றார்.
"வனத்துறையினால் சிறைபிடிக்கப்படும் காட்டு யானைகள் ஏற்கனவே, நிலையற்ற மனநிலையைக் கொண்டிருக்கும். மேலும், நீண்ட தூரப் பயணத்தால் சீக்கிரம் மதநீர் சுரக்க வாய்ப்பு ஏற்படும். மேலும், சாலைகள் குண்டும், குழியுமாகவும், மலைப்பாதைகளைக் கொண்டிருப்பதாலும் யானைகளுக்கு காயங்களும் ஏற்படுகிறது. சிறைபிடிக்கப்படும் யானைகள் விரைவில் பயிற்சி மையங்களுக்குக் கொண்டு சென்றால், பயிற்சியாளர்கள் அதற்கான பயிற்சியை தொடங்கி விடுவார்கள்," இவ்வாறு கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சாடிவயல் முகாமில் அழைத்துச் செல்லப்படும் காட்டு யானைகளுக்கு, சேரன் மற்றும் ஜான் ஆகிய கும்கி யானைகளின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சிறைபிடிக்கப்படும் அனைத்துக் காட்டு யானைகளுக்கும் கும்கிக்கான பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. அவற்றிற்கான மனநிலையைப் பொறுத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு யானைக்கும் பயிற்சி காலம் வேறுபடும். சில யானைகள் விரைவில் பாகன்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதால், அவற்றின் பயிற்சி காலம் விரைவில் முடிந்து விடுகிறது. ஒருசில யானைகளின் பயிற்சி காலம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது, என்கின்றனர் வன உயிரின வல்லுநர்கள்.