நீலகிரி : கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தில் ரூ. 67 லட்சம் மதிப்புள்ள தரமற்ற உருளைக்கிழங்கு விதைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
நீலகிரி : கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தில் ரூ. 67 லட்சம் மதிப்புள்ள தரமற்ற உருளைக்கிழங்கு விதைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மலை தோட்ட காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு சமவெளி பிரதேசங்களுக்கும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தாண்டு இரண்டாவது போகத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உருளைக்கிழங்கு விதைகளை நீலகிரி கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தில் (NCMS) விவசாயிகள் சுமார் ரூ.67 லட்சத்திற்கு விதை வாங்கிப் பயிரிட்டுள்ளனர். இதில், பெரும்பாலான விதைகள் தரமற்று இருந்ததால், உருளைக்கிழங்கு போதிய விளைச்சல் தரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் இருந்து வாங்கப்பட்ட இந்த தரமற்ற விதைகளால் விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இம்முறை நீலகிரி உருளைக்கிழங்குக்கு பதிலாக கர்நாடகா உருளைக்கிழங்கு தான் கிடைக்கும் வகையில், கூட்டுறவு விற்பனையாளர் சங்க அதிகாரிகள் செயல்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் கூட்டுறவு விற்பனையாளர் சங்கம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.