நீலகிரி : விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டுவதற்காக முதுமலை முகாமில் இருந்து தேனிக்கு கும்கி யானைகள் இன்று கொண்டு செல்லப்பட்டன.
நீலகிரி : விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டுவதற்காக முதுமலை முகாமில் இருந்து தேனிக்கு கும்கி யானைகள் இன்று கொண்டு செல்லப்பட்டன.
தமிழகம் மற்றும் கேரளா குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்ட நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள கும்கி யானைகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்ட முதுமலை முகாமில் இருந்து கும்கி யானைகளின் உதவி கோரப்பட்டது.
அதன்படி, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து விஜய் மற்றும் வசீம் ஆகிய இரண்டு கும்கி யானைகள் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதிக்கு வனத்துறையினரால் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்டிய பின்னர், மீ்ண்டும் முதுமலை முகாமிற்கு கும்கி யானைகள் திரும்பும் என வனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.