தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறை முடங்கிக் கிடக்கின்றது : சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

கோவை : தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறை முடங்கிக் கிடப்பதாக தி.மு.க., மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார்

கோவை : தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறை முடங்கிக் கிடப்பதாக தி.மு.க., மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான நா.கார்த்திக் குற்றம்சாட்டியுள்ளார். 

நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமலும், பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்தப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வலியுறுத்தி தி.மு.க., மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான நா.கார்த்திக் கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதியிடம் மனு அளித்தார்.



இதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- கோவையில் தற்போது தொடர் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சிங்காநல்லூர் தொகுதி மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறை முடங்கிக் கிடக்கின்றது. மாநகராட்சியின் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றது. வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் டன் குப்பைகள் தேங்கி கிடக்கின்றது. 

கடந்த தி.மு.க., ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராகவும், தலைவர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும் இருந்தபோது, ரூ. 95 கோடியே 50 லட்சம் பெறப்பட்டு திடக்கழிவு மேலாண்மைக்காகவும், விஞ்ஞான ரீதியிலும் குப்பைகள் அழிக்கப்பட்டது. ஆனால், இப்போது உள்ளாட்சித்துறை சீர்கெட்டு விட்டது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சாதகமாகவே இருக்கிறது.

மேலும், டெண்டர்களை மக்கள் மன்றத்தில் எடுத்துச் செல்ல வேண்டாம். எனவே, அவர் கை காட்டுபவர்களுக்கே டெண்டர் செல்கின்றது. ஆன்லைன் விண்ணப்பங்கள் கொடுப்பதோடு சரி, செயல்படுவதில்லை. எஸ்.பி.வேலுமணியின் தொகுதியில் கூட ஒருசில பகுதிகள் கண்டுகொள்ளப்படவில்லை. கோவை மாவட்டம் முழுவதும் இருக்கும் 9 சட்டமன்ற தொகுதிகளும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இந்த மோசமான உள்ளாட்சித்துறையால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியாளர்களை மாற்றும் காலம் வரை மக்களைக் காப்பாற்ற முடியாது, என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...