சர்வதேச விருது வழங்கும் விழாவில் உரையாற்ற கோவையைச் சேர்ந்தவருக்கு அழைப்பு

கோவை : லோவா நாட்டில் நடைபெற இருக்கும் சர்வதேச உணவு மற்றும் விவசாய விருதுகள் வழங்கும் விழாவில் உரையாற்ற கோவையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஏ.ஜி. பத்மநாபனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை : லோவா நாட்டில் நடைபெற இருக்கும் சர்வதேச உணவு மற்றும் விவசாய விருதுகள் வழங்கும் விழாவில் உரையாற்ற கோவையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஏ.ஜி. பத்மநாபனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

கோவையில் 'நோ ஃபுட் வேஸ்ட்' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் உணவு வீணாவதைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இவரது முயற்சியால், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் 'நோ ஃபுட் வேஸ்ட்' செயல்பட்டு வருகிறது. 

வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் சர்வதேச உணவு மற்றும் விவசாயத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கும் விழா அமெரிக்கா கண்டத்தில் இருக்கும் நாடான லோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சர்வதேச தலைவர்களான சீன துணை அதிபர் ஜிங்பிங், ஐ.நாவின் பொதுச்செயலாளர் பான் கி மூன், முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், பில்கேட்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கின்றனர். 

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுமாறு கோவையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ஏ.ஜி. பத்மநாபனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...