மாற்று வீடு வழங்கும் திட்டத்தில் பெயர் விடுவிப்பு : கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கோவை : குடிசை மாற்று வாரியத்தால் மாற்று வீடு வழங்கும் திட்டத்தில் சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலை அருகே இருப்பவர்களின் பெயர் விடுபட்டு போனதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவை வி.கே.கே.மேனன் சாலையில் குடிசைமாற்று வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பு அமைந்துள்ளது. குடியிருப்பின் அருகிலேயே ஏராளமான ஆக்கிரமிப்பு வீடுகளும் அமைந்துள்ளன. 

குடிசை மாற்று வாரிய வீடுகள் பழுதடைந்த நிலையில், குடியிருப்பில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு, கீரணத்தம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு ஆக்கிரமிப்பில் இருந்த 54 பேருக்கும் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படவில்லை. 

இந்த நிலையில், வீடு கிடைக்காத 54 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்று ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

இதனையடுத்து, அலுவலகத்திற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, 54 பேருக்கும் உடனடியாக வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதனையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...