நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய கால நிலை நிலவிவந்த நிலையில் பரவலாக மழையும் பெய்து வருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் கூடிய கால நிலை நிலவிவந்த நிலையில் பரவலாக மழையும் பெய்து வருகிறது.
அவ்வப்போது மூடுபனியும் உருவாகி வருவதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்குள்ள சுற்றுலாத்தலங்களான சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ், போன்ற பகுதிகளில் உள்ள காட்சிமுனைகளை காண முடியாத சூழல் நிலவுவதால் அப்பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.