திருப்பூர் : ஆனைமலைமாறு நல்லாறு திட்டத்தை அரசியல் செய்ய வேண்டாம் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன விவசாயிகளை சந்தித்து மனுக்களை பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டமன்ற சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், தமிழக முதல்வர், துணை முதல்வர் உட்பட நாங்களும் விவசாயிகள் தான், இந்த திட்டத்தை நிறைவேற்ற கேரள அரசின் இசைவு தேவைப்படுகிறது. இடைமலையாறு இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை என கேரள அரசு தெரிவிப்பதால் ஒப்பந்தப்படி நம்மால் அணை கட்ட முடியவில்லை, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் பயனாளிகள் நாங்கள். எங்கள் விருப்பமும் திட்டம் நிறைவேற வேண்டும் என்பதுதான் என்றார்.

மேலும், ஓய்வுபெற்ற பொறியாளர், மின்வாரிய அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விரைவில் அக்குழுவினர் திட்டம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிப்பார்கள், விவசாயிகள் மற்றும் பிரதிநிதிகள் விரைவில் முதலமைச்சரை சந்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், விரைவில் கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இத்திட்டத்தை நிறைவேற்ற முதல்வர் அக்கறையுடன் உள்ளார். இத்திட்டத்தை அரசியல் ஆக்க வேண்டாம் இது விவசாயிகளின் வாழ்வாதார திட்டம் என்று தெரிவித்தார்.